சபையின் மனித உரிமைகள் மன் றம் ஒருதலைப்பட்சமாக செயல்படு வதாகக் கூறி, அதிலிருந்து அமெ ரிக்கா வெளியேறிவிட்டது. மனித உரிமைகள் மன்றத்தில் இருந்து அமெரிக்காவின் விலகல் வருத்தமளிப்பதாக பல நாடுகளின் தலைவர்கள் கூறியிருந்தாலும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. இந்த அமைப்பில் அமெரிக் காவையும் சேர்த்து 47 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
மனித உரிமைகள் தொடர்பில் மோசமான நிலையில் இருக்கும் நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டது தொடர்பில் அண் மைக்காலமாக மனித உரிமைகள் மன்றம் விமர்சனங்களை எதிர் கொண்டது. இந்நிலையில், இம்மன்றத்திற் கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "மனித உரிமைகள் தொடர்பில் மன்றத்தின் செயல்பாடு கள் பாரபட்சமாக உள்ளன. "பாசாங்கு மற்றும் தன்னாட்சி அமைப்பு போல செயல்படும் மன் றம் மனித உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறது. "மேலும் மனித உரிமைகள் மன்றத்தின் -அரசியல் சார்புடைய பாரபட்சம் காரணமாகவே அதில் இருந்து விலகும் இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது," என்று ஹேலி தெரிவித்தார்.