செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணப் போட்டிகளில் விளை யாடும் அணிகளில் கடைசி தர நிலையை (70வது இடம்) பெற்று உள்ளபோதும் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குள் முதல் அணியாக நுழையும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது, போட்டிகளை ஏற்று நடத்தும் அணியான ரஷ்யா. முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித் தள்ளிய ரஷ்யா, நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்துவைத் தோற்கடித்தது.
நேற்று நடந்த 'ஏ' பிரிவின் இன்னோர் ஆட்டத்தில் உருகுவே யும் சவூதி அரேபியாவும் மோத இருந்தன. அதில் உருகுவே வென் றிருந்தால் அவ்வணியும் ரஷ்யாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தாலும் ரஷ்யாவிற்குப் பாதகமில்லை. உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாத நட்சத் திர வீரர் முகம்மது சாலா நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கியதால் எகிப்து அணியினரின் முகங்களில் உற்சாகம் தாண்டவமாடியது.
தமது அணியின் மூன்றாவது கோலை அடித்த மகிழ்ச்சியை சக வீரருடன் பகிர்ந்துகொள்ளும் ரஷ்ய ஆட்டக்காரர் அர்ஜோம் ஸுபா (வலது). படம்: ஏஎஃப்பி