$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு

குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஐந்து அறை வீடு ஒன்று, 1.1 மில்லியன் வெள்ளிக்கு விற்கப் பட்டுள்ளது. அங்கு இதுவரை எந்த வீடும் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டதில்லை. ஹாலந்து டிரைவ் புளோக் 18Cன் 38ஆவது மாடியில் உள்ள அந்த வீடு, 1,259 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. விற்பனையில், ஒரு சதுர அடி $874க்கு விலைபோனது. தேர்ந் தெடுக்கப்பட்ட, ஒட்டு மொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அந்த வீட்டுக்கு இன்னும் 93 ஆண்டு குத்தகைக் காலம் உள்ளது. வீட்டின் பார்வையை மறைக்கும் விதத்தில் வேறு கட்டடங்கள் அப்பகுதி யிலில்லை.

"தனியார் வீடுகளுக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கும் பிரபலமான தலமாய் ஹாலந்து வில்லேஜ் திகழ்கிறது," என்று அந்த வீட்டை விற்ற ஈஆர்ஏ ரியல்டி சொத்து நிறுவனத்தின் முகவர் ஜாய்ஸ் கோ தெரிவித்தார். "போன விஸ்தா ரயில் நிலையத் திற்கும் ஹாலந்து வில்லேஜ் ரயில் நிலையத்திற்கும் நடுவே இந்த வீடு அமைந்துள்ளது," என்றும் அவர் கூறினார். வீட்டை விற்றவர், தனியார் வீட்டை வாங்க இருப்ப தாகவும் வீட்டை வாங்கியவர் முன்னர் தனியார் வீட்டில் தங்கி இருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிந்தது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!