கடற்துறை பாதுகாப்புக்கான உன்னத நிலையம் ஒன்று சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரியில் $14 மில்லியன் செலவில் திறக்கப்பட உள்ளது. 'சிஇஎம்எஸ்' என்றும் அந்த நிலையம் அழைக்கப்படும். கடலில் பாதுகாப்பு தொடர்பான அனைத் துலக மாநாட்டில் நேற்று அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரியும் சிங்கப்பூர் கடற்துறை கல்வி நிலையமும் இணைந்து அந்த நிலையத்தை அமைத் துள்ளன.
விபத்துகளைக் குறைப்ப தற்கான தொழில்நுட்பத் தீர்வுக ளையும் பயிற்சி அமைப்புகளையும் உருவாக்க அந்த நிலையம், கடற் துறையைச் சார்ந்தவர்களுடனும் ஆய்வாளர்களுடனும் இணைந்து செயல்படும். அத்துடன், கடல் பயணம், கப்பல்களின் செயலாக்கம் ஆகியவற்றிலும் நிலையம் கவனம் செலுத்தும். நான்காம் காலாண்டிற்குள் அந்த நிலையம் இயங்கத் தொடங்கும். போக்குவரத்து, சுகா தாரத்திற்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
வலக்கோடியில் சுகாதார, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் லாம் பின் மின், கடல் பாதுகாப்பு மாநாட்டில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன சாதனங்களைப் பார்வையிடுகிறார். படம்: சாவ்பாவ்