நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த வாரம் நடைபெற்ற இணைப்பாட வகுப்பு முகாம் ஒன்றின்போது நாற்காலியில் அமர்ந்திருந்த மாணவனுக்கு முன்னால் நின்று மாணவி ஒருவர் ஆபாசமான முறையில் தமது கால்களை விரித்து ஆடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அந்த விளையாட்டு, கைபேசியில் எடுக்கப்பட்ட காணொளியில் பதிவானது. அந்த மாணவி ஆடிய ஆட்டத்தின்போது படபடப்புடன் காணப்பட்ட அந்த மாணவன், ஒரு சமயத்தில் அவர் தலைகுனிந்த காட்சியும் பதிவாகின.
கடந்த செவ்வாய்க்கிழமை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி 23,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த மாணவி ஆடும்போது பின்னணியில் உள்ள பிற மாணவர்கள் அவரை உற்சாகப்படுத்துவது அந்தக் காணொளியில் தெரிய வந்தது.