இந்தோனீசியா படகு விபத்து: கேப்டன் கைது

ஜகார்த்தா: இந்தோனீசியா வின் சுமத்ராவில் உள்ள டோபா ஏரியில் கடந்த திங்கட்கிழமை படகு மூழ்கியதைத் தொடர்ந்து காணாமற்போனவர்களை தேடும் பணி தொடரும் நிலையில் அப்படகு கேப்டன் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து காப்பாற்றப்பட்ட 18 பேரில் படகு கேப்டனும் ஒருவர். படகு மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாக முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் 3 பேர் விபத்தில் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இன்னும் 193 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மோசமான பருவநிலை காரணமாக அப்படகு ஏரியில் மூழ்கியதாகக் கூறப்பட்ட போதிலும் அப்படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்த தால் அப்படகு மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!