வாஷிங்டன்: எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோத மாகக் குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கைது செய்யப்படும் குடியேறி களின் குழந்தைகளை அவர்களி டமிருந்து பிரித்து வைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்த கொள்கையை நெருக்குதல் காரணமாக தற்போது கைவிட்டுள் ளார். பெற்றோர்களிடமிருந்து அவர் களின் பிள்ளைகளைப் பிரிக்கும் அமெரிக்காவின் செயலுக்கு அனைத்துலக ரீதியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து திரு டிரம்ப் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லை யைக் கடக்கும் குடியேறிகளைக் கைது செய்யும்போது குழந்தை களை பெற்றோரிடமிருந்து பிரிக் காமல் இருதரப்பையும் தடுப்பு நிலையங்களில் ஓரிடத்தில் வைக்குமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். படம்: ஏஎஃப்பி