நீண்ட காலதாமதத்திற்குப் பின்னர் வெளியாக இருக்கிறது 'சர்வர் சுந்தரம்'. சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படம் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் கிட்டி, ராதாரவி, சாமிநாதன், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நகைச்சுவைச் சித்திரமாக உருவாகியுள்ள இப்படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக இப்படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வந்தது. தற்போது அந்தத் தடை விலகியிருப்பதாகத் தகவல்.
'தில்லுக்குத் துட்டு' இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் சந்தானம் அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் 'மன்னவன் வந்தானடி' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவற்றுக்கான பணிகள் துவங்கி உள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு விநியோகிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தனக்கு நல்ல திருப்புமுனையைத் தரும் என சந்தானமும் உறுதியாக நம்புகிறாராம்.