வடகொரியாவில் அணுவாயுதப் பரிசோதனைக்குப் பயன்படுத்தப் பட்ட ஓர் இடத்தைத் தான் அடை யாளம் கண்டிருப்பதாக அமெ ரிக்கா தெரிவித்து இருக்கிறது. அந்த இடத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உறுதி கூறியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. அந்த இடம் நாட்டின் மேற்குப் பகுதியில் இருப்பதாகவும் நெடுந்தொலைவு ஏவுகணைகளைச் சோதித்துப் பார்க்க அந்த இடம் பயன்படுத்தப் பட்டு வந்திருப்பதாகவும் அமெ ரிக்க அதிகாரி ஒருவர் குறிப் பிட்டு இருக்கிறார்.
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கொரிய தலை வர் கிம்மும் ஜூன் 12ஆம் தேதி சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், தன்னுடைய அணுவாயுத ஏவுகணை இடம் ஒன்றை அழித்துவிட திரு கிம் உறுதி தெரிவித்ததாக கூறினார். இருந்தாலும் அந்த ஏவுகணை இடத்தின் பெயரை அவர் குறிப் பிடவில்லை. அந்த இடத்தை 'சோஹெ துணைக்கோள ஏவு தளம்' என்று அமெரிக்க அதி காரி ஒருவர் புதன்கிழமை அடை யாளம் கூறினார். அந்த இடத்தை, நெடுந் தொலைவு பாயும் அணு ஏவு கணைகளைச் சோதிக்க வட கொரியா பயன்படுத்தி இருக் கிறது என்றார் அவர்.