கஸன்: முதல் ஆட்டம் சமனான தால் இரண்டு புள்ளிகளை இழந்த ஸ்பெயினுக்கு இரண்டாவது ஆட் டத்திலும் கிட்டத்தட்ட அதே நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், அவ்வணிக்குக் கைகொடுத்தது காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம். இதனால் 'தலை தப்பியது தம்பி ரான் புண்ணியம்' என ஸ்பெயின் வீரர்கள் நிம்மதி அடைந்தனர். போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்களை அடித்ததால் தலைப்புச் செய்தியில் இடம்பெறும் தகுதியைப் பெற்றார் ஸ்பானிய தாக்குதல் ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா. ஆனாலும், 'ஹாட்ரிக்' கோல்களை அடித்ததன் மூலம் அந்தப் பெருமையை அவ ரிடமிருந்து பறித்துக்கொண்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத் திலும் கோஸ்டாவே ஸ்பெயினின் நாயகனாக ஒளிர்ந்தார். 54வது நிமிடத்தில் அவர் அடித்த கோலால் 1-0 என்ற கணக்கில் வெற்றியைச் சுவைத்த ஸ்பெயின், கிட்டத்தட்ட அடுத்த சுற்றை நெருங்கிவிட்டது.
ஸ்பெயினின் வெற்றி கோலை டியேகோ கோஸ்டா (வலது) அடிக்க, உற்சாக மிகுதியில் அவர் மீதேறி ஆரத் தழுவி வாழ்த்தும் சக ஸ்பெயின் ஆட்டக்காரர் இஸ்கோ. படம்: ராய்ட்டர்ஸ்