எக்கதெரின்பர்க்: இளம் வீரர் கிலியன் எம்பாப்பே அடித்த ஒற்றை கோலால் 1-0 என்ற கணக்கில் பெருவை வென்ற பிரான்ஸ் 'சி' பிரிவிலிருந்து முதல் அணியாக காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் கிட்டிய தோல்வி, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டி களில் விளையாடத் தகுதி பெற்ற பெரு அணியினரின் நம்பிக்கை யைச் சிதறடிப்பதாக அமைந்தது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அடித்த கோலால் உலகக் கிண் ணப் போட்டிகளில் ஆக இளம் வயதில் கோலடித்த பிரெஞ்சு ஆட்டக்காரர் எனும் பெருமையைப் பெற்றார் 19 வயதான எம்பாப்பே. டேவிட் டிரெஸிகி தமது 20 வயதில் கோலடித்து இருந்ததே முன்னைய சாதனை. ஒலிவியர் ஜிரூ வலையை நோக்கி உதைத்த பந்தை பெரு தற்காப்பு ஆட்டக்காரர் ஒருவர் தடுத்தார்.
ஆயினும், பந்து கோல் காப் பாளர் பெட்ரோ காலிசின் தலைக்கு மேலே சென்று விழ, அதை எளி தாக கோலாக்கினார் எம்பாப்பே. இருந்தபோதும் முற்பாதியில் பிரெஞ்சு வீரர்கள் பல கோல் வாய்ப்புகளை வீணடித்தனர். இரண்டாம் பாதியில் அவர்களை பெருவின் கோல் பகுதியில் காண்பதே அரிதாக இருந்தது.