கர்ப்பிணி ஒருவருக்கு 'எச்ஐவி' இருப்பதாக, ஊட்ரம் பலதுறை மருந்தகம் தவறாக கூறியதை தொடர்ந்து 'சிங்ஹெல்த்' மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஃபிலிப்பீன்ஸை சேர்ந்த அந்த 34 வயது பெண், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத் திற்கான தனது சுகாதார பரி சோதனை அறிக்கையை உறுதி செய்ய அந்த மருந்தகத்திற்குச் சென்றிருந்ததாக 'ஸ்டாம்ப்' செய்தி இணையத்தளம் குறிப் பிட்டது.
சோதனை அறிக்கையில் அந்த மாதிற்கு 'எச்ஐவி' இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பெண்ணைப் பரி சோதித்த மருத்துவர், அவருக்கு 'எச்ஐவி' உள்ளதாகக் குறிப்பிட் டார். நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்பதாக, 'சிங்ஹெல்த்' பல துறை மருந்தகங்களுக்கான இயக்குநர் டாக்டர் ஷனேட் வோங் தெரிவித்தார். "இதனால் பதற்றமும் கவலையும் அடைந்த அந்த மாதிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்," என்று அவர் கூறி னார். பின்னர், அந்த மாதிடம் சரியான அறிக்கை கொடுக்கப் பட்டதாக சிங்ஹெல்த் தெரி வித்தது.