தனியார் வாடகைக் கார் உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள கிட்டத்தட்ட 5,3-00 ஓட்டுநர்கள், இன்னும் அதற்கென தேர்ச்சி பெறவில்லை. உரிமங்கள் குறித்த புதிய விதிமுறைத் திட்டம் அடுத்த மாதம் நடப்புக்கு வரும்போது அவர்கள், தனியார் வாடகை சேவை வழங்க முடியாது. மேலும் 17,700 ஓட்டுநர்கள், உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் சேராததால் அவர்களும் வாட கைச் சேவைகள் வழங்குவதை நிறுத்தவேண்டும். நிலப் போக்குவரத்து ஆணை யம் இந்தத் தகவல்களைத் தனது அறிக்கையில் நேற்று வெளி யிட்டது.
பயிற்சியை முடித்துக்கொள்ள அந்த 23,000 ஓட்டுநர்களுக்கு ஓர் ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது, அடுத்த மாதம் நிறைவு பெறும. மொத்தத்தில் 42,900 ஓட்டுநர் களுக்கு அந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் களில் 19,900 பேர், அந்த 10 மணி நேர பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அந்தத் தேர்வுக்கான தேர்ச்சி விகிதம் 70% என்றது ஆணையம். சுகாதாரம், பாதுகாப்பு போன்ற தலைப்புகளைச் சார்ந்த கேள் விகள், தேர்விலிருந்து நீக்கப் பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னர் தெரிவித்தது. அந்த கேள்விகளுக்கும் தங்களது வேலைக்கும் தொடர் பில்லை என்று ஓட்டுநர்கள் கருதினர். ஆயினும், அந்தத் தலைப்புகள் தொடர்ந்து பாடத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.