எட்டுத்தட பசுமைச் சாலை: எதிர்ப்பையும் மீறி பணிகள்

சென்னை: சென்னை=சேலம் புதிய எட்டுத்தட பசுமைச் சாலை திட்டம் மக்கள் எதிர்ப்பையும் மீறி பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக, 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக் காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கி இருக்கிறது. புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும் கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

எட்டுத்தட சாலைக்கு எதிராக நேற்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. என்றாலும், சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்துவதற் காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங் களில் நிலத்தை அளவிடும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் ஓர் ஆண்டுக்கு 6 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சம் ஆகும். சென்னை=சேலம் இடையேயான பயண தூரம் 60 கி.மீ. குறையும். பயண நேரமும் குறையும். இத்திட்டத்துக்காக தேவைப் படும் நிலத்தை அளவிடும் பணி கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்களில் வரைவு செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பிறகு கருத்துக்கேட்பு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடத் திய பிறகே திட்டம் செயல்படுத்தப் படும் என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்தச் சாலை திட்டத்துக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நிலத்தை அளந்தபோது, 14 பேர் கைகளில் மண்ணெண்ணெய், பெட்ரோல் டப்பிகளுடன் வந்து தங்கள் நிலத்தை அளவீடு செய்தால் தீக் குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

அதனால் அதிகாரிகள் அருகே இருந்த வேறொரு நிலத்துக்குச் சென்றனர். குள்ளம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அயோத் தியாப்பட்டணம், ஏரிக்காடு, மாசி நாயக்கன்பட்டி சக்திநகர், வரகம் பாடி, உடையாப்பட்டி வரை எங்கும் அதிகாரிகளை விவசாயிகள் எதிர்த்தனர்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!