அன்புக்கு பணிந்த அரசாங்கம்: அதே பள்ளியில் பகவான்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் பகுதியில் செயல் படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்பவர் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது அயராத முயற்சியால் இப்பள்ளி ஆங்கிலத்தில் 100% தேர்ச்சி பெற்றது. மாணவர்களிடம் பாடத்தைத் தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்குப் பிடித்துவிட்டது. இந்நிலையில், பகவானை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

இதையறிந்த பள்ளி மாணவர் கள் ஆசிரியரைச் சூழ்ந்துகொண்டு வேறு பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று கண்ணீர் மல்க கதறினர். இச்சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. இதையடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி அதிகாரி அருட்செல்வன் அந்தப் பள்ளியில் ஆய்வு செய்தார். மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் அருட்செல்வன் விசாரணை நடத்தினார். இவ்வேளையில், ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக் கான அதிபர் விருது கிடைக்க வேண்டும் என்று குரல் ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!