சிங்கப்பூரில் ரயில் பயணம் மேற்கொள்ளும் உடற்குறையுள்ளோருக்குப் புதிய வசதி செய்து தரப்பட உள்ளது. பயணக் கட்டண நுழைவில் கட்டண அட்டையைத் தட்ட வேண்டிய அவசியம் அவர் களுக்கு இருக்காது. அதற் கென 'ஹேண்ட்ஸ்=ஃப்ரீ' கட் டண நுழைவுகள் அமைக்கப்பட உள்ளன. 'புளூடூத்' வசதியுடன் கூடிய கைபேசியைப் பயன்படுத்தி அவர் கள் அதில் நுழைந்து செல்ல லாம்.
அதற்கென உருவாக்கப் பட்ட கைபேசி செயலி அல்லது வானலை அதிர்வெண் அட்டை ஆகியவற்றின் உதவி அதற்குத் தேவைப்படும். கைபேசியையோ அட்டையையோ கட்டண நுழை வில் உள்ள படிப்பியில் காட்ட வேண்டி இருக்காது. அவற்றை சட்டைப் பையிலோ கைப்பை யிலோ அவர்கள் வைத்துக் கொண்டால் போதுமானது. 'ஹேண்ட்ஸ்=ஃப்ரீ' தானி யக்க கட்டண வசூலிப்பு முறை யின்கீழ் இது இயங்கும். இப்புதிய வசதி கெம்பாங் கான், பிடோக், தியோங் பாரு, ரெட்ஹில் ஆகிய 4 எம்ஆர்டி நிலையங்களில் சோதித்துப் பார்க்கப்படுகிறது.
'ஹேண்ட்ஸ்- ஃப்ரீ' கட்டண நுழைவுக்குள் புதிய வசதி மூலம் நுழைந்து சோதனை முயற்சியில் ஈடுபட்ட சக்கர நாற்காலி பயணிகளை போக்குவரத்து, தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சந்தித்துப் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2018-06-23 06:10:00 +0800