மகாதீர்: 1எம்டிபி நிதியை மீட்க மலேசியா முயற்சி

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவனம் மூலம் இழந்த 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.1 பில்லியன்) நிதி, மற்றும் கோல்ட்மன் சாக்ஸ் குரூப் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி இவற்றை மீட்பதற்கான முயற்சிகளை மலேசியா மேற் கொள்ளவிருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். புளும்பெர்க் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியின் போது திரு மகாதீர் இவ்வாறு கூறினார். "சில தவறுகள் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டப் படுவதை தவிர்க்கும் பொருட்டு முந்தைய அரசாங்கம் காணாமற் போன 1எம்டிபி நிதி அவர் களுடைய பணம் அல்ல என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

அதனால்தான் அவர்கள் அந்தப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் செய்யவில்லை. "ஆனால் அந்தப் பணம் நம்முடையது என்பது எங்களுக்குத் தெரியும்," என்று திரு மகாதீர் கூறினார். 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் பல நாடுகள் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றன.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!