இவன் தந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி உள்ள படம் பூமராங். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபன் படேல் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அதிரடிப் படமாக உருவாகி வருகிறது. கண்ணனே தயாரித்தும் உள்ளார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரெடாட்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்முறையாக மேகா ஆகாஷ், தன் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
பூமராங் படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ். படத்தில் சொந்த குரலில் அவர் பேச காரணமும் அவர் தான். அவரின் நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம். அவரின் திறமையை வீணாக்க வேண்டாம் என்பதற்காகவே அவரை டப்பிங் பேச வைத்தோம் எனக் கண்ணன் கூறியுள்ளார்.