பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வித்தியாசமான திருமண ஊர் வலம் நடைபெற்றுள்ளது. மணமகனும் மணமகளும் மண் வாரும் வாகனத்தில் உட்கார்ந்து ஊர்வலமாகச் சென்றுள்ளனர். இந்தத் திருமண ஊர்வலத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பலர் தங்களுடைய வியப்பை பதிவு செய்துள்ளனர். தென் கனரா மாவட்டத்தில் உள்ள புத்தூர் அருகேயுள்ள பர் புஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன், 27, மண் வாரும் இயந் திரத்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த மமதா, 22, என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் மாப்பிள்ளை சேத்தன் தனது மனைவியுடன் காரில் திருமண ஊர்வலம் செல்ல மறுத்துவிட்டார். அதே சமயத்தில் தனது மண் வாரும் வாகனத்தில் மனைவியுடன் ஊர்வலமாக செல்ல அவர் விருப்பம் தெரிவித்தார். இதற்கு மமதா முதலில் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் மனைவியை சமாதானப்படுத்தி மண் வாரும் வாகனத்தில் அமர வைத்து அவர் ஊர்வலமாக அழைத்து சென்றார்.
இதனை பொதுமக்கள் அனை வரும் வியப்புடன் பார்த்தனர். ஊர்வலத்தில் பங்கேற்ற நண்பர் களும் உறவினர்களும் கிண்டல் செய்ததையும் பொருட்படுத்தாமல் புதுமணத் தம்பதிகள் வெட்கத் துடன் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். புது மாப்பிள்ளை சேத்தன், "இந்த மண் வாரும் வாகனத்தை மிகவும் சிரமப்பட்டு வாங்கினேன். என் குடும்பத்துக்கு இதுதான் சோறு போடுகிறது," என்றார்.
திருமணத்துக்குப் பிறகு மண் வாரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற சேத்தன்- மமதா.