ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 'ஸ்கேப்' கட்டடத்தில் 4,000 சதுர அடி அளவில் இளையர்கள் கூடிச் செயல்படுவதற்கென ஓர் இடம் நேற்றுக் காலை திறக்கப்பட்டது. சினிலேஷர் கடைத் தொகுதிக் குப் பக்கத்தில் இளையர்கள் கூடும் இடமான ஸ்கேப்பின் நான்காவது மாடியில் திறக்கப்பட்ட இந்த இடத்தில் சுமார் 120 இளம் தொழில்முனைவர்கள் ஒன்றுகூட லாம். புதுப்பது யோசனைகள் குறித்துக் கலந்து ஆலோசிக்கவும், செயல்திட்டக் கூட்டங்கள் நடத்தவும் தங்கள் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணைந்து செயல்படவும் இளையர்கள் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள லாம்.
'ஹப்குவாட்டர்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த இடம், முன்பு இளையர்களின் தொழில் முனைப்பு திட்டத்திற்கு ஏதுவான ஒரு கூடும் இடமாக விளங்கியது. தங்களின் திட்டத்தை அடையத் தேவையான திறன் களைப் பற்றிய பயிலரங்குகள் இங்கு நடத்தப்பட்டன. இந்த இடத்தைப் புதுப்பிக்க சுமார் $350,000 செலவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
'ஸ்கேப்' தலை மையகத்தில் இளை யர் ஒன்றுசேர்ந்து பணியாற்றும் இடம் தொடர்பான பணிக் குழுவினருடன் உரையாடுகிறார் தொடர்பு, தகவல் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்