குருதிக் கொடையாளர்களாக பங் களித்தமைக்காக இவ்வாண்டு சாதனை அளவாக அதிகமானோ ருக்கு உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் குருதிக் கொடை நடவடிக்கைகளில் இளம் சிங்கப்பூரர்கள் குறைந்த அளவே பங்கேற்றுள்ளனர். உலகக் குருதிக் கொடை தினத் தையொட்டியும் தலைசிறந்த குருதிக் கொடையாளர் அங்கீகரிப்பு நிகழ்ச் சியையொட்டியும் கரையோரப் பூந் தோட்டங்களில் நேற்று 1,720 குருதிக் கொடையாளர்கள் ஒன்று திரண்டனர்.
அவர்களில் 21 பேர் 'மெடல் ஃபார் லைஃப்' விருதைப் பெற்றனர். ஒருவர் தமது வாழ்நாளில் 200க்கு மேற்பட்ட தடவை குருதிக் கொடை வழங்கியதற்காக வழங்கப்படும் ஆக உயரிய விருது இது. சிங்கப்பூர் தேசிய ரத்த சேமிப்பு திட்டம் கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஆக அதிகமானோர் இவ்விருதைப் பெற் றிருப்பது இதுவே முதல்முறை. இந்த வருடாந்திர நிகழ்வை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து நடத்தின. கடந்த ஆண்டு 73,100 பேர் குருதிக் கொடை அளித்ததால் 116,000க்கு மேற்பட்ட ரத்த அலகு கள் சேர்ந்தன. இதன்மூலம் சிங் கப்பூரில் 32,000க்கு மேற்பட்ட நோயாளிகள் பலனடைவர்.