சென்னை: ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பதவியைத் தங்கத் தமிழ்ச்செல்வன் ராஜி னாமா செயந்திருப்பதை வர வேற்பதாக அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றார். "டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவற்றில் விரைவில் தீர்ப்பு வரும். அதன் பிறகு அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து விலக நேரிடும்.
"ஆண்டிப்பட்டி தொகுதிக்கு மட்டுமல்லாமல், ஆர்.கே. நகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதிமுக வெற்றி பெறும்," என்றார் அமைச்சர் பாண்டியராஜன். இதற்கிடையே மதுரையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர், தமிழ் மொழியின் செல்வாக்கை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "உலகளவில் அதிக செல் வாக்கு பெற்ற மொழிகளில் தமிழ் 14ஆவது இடத்தில் உள்ளது. அதை 10ஆவது இடத்துக்குக் கொண்டு வரு வதற்கும், உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கவும் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொள் ளும்," என்றார் பாண்டியராஜன்.