நடிகை இலியானா எப்போது தனது காதலரைக் கரம்பிடிப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். தற்போது தெலுங்கு, தமிழ்த் திரையுலகங்களை அறவே புறக்கணித்திருக்கும் அவர் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அங்கும் சொல்லிக் கொள் ளும்படி பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் இலியானா அசரவில்லை. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இசைத்தொகுப்புகளை வெளியிடுவது தொடர்பான பணிகளைக் கவனித்து வருகிறாராம்.
ஏற்கெனவே 'பெலி தபா' என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட இசைத்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கோவா நகரில் இயங்கிவந்த சிறு இசைக்குழுக்களில் பாடிய அனுபவம் இலியானாவுக்கு உண்டு. அந்த அனுபவத்தைப் புதுப்பித்து தற்போது இந்தி, ஆங்கிலப் பாடல்களைக் கொண்டு இசைத்தொகுப்புகளை உருவாக்கி வருகிறார். "எனது குரலில் உருவாக உள்ள இந்த இசைத் தொகுப்புகள் ரசிகர்களை நிச்சயம் மயக்கும். இந்தப் பாடல்கள் நாடு முழுவதும் ஒலிக்கும்," என்ற தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறுகிறாராம் இலியானா.