சரியான முடிவு என நிரூபித்த மூசா

வோல்கோகிராட்: ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக் கையை நைஜீரியா அதிகப்படுத்திக் கொண்டதுடன் இந்த முடிவு அர் ஜெண்டினாவிற்கும் நல்ல செய்தி யாக அமைந்துள்ளது. குரோவே‌ஷியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டதால் உலகக் கிண்ணத் தொடரைவிட்டே வெளி யேறும் நிலைக்கு அர்ஜெண்டினா தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நைஜீ ரியாவை வீழ்த்துவதன் மூலம் அவ்வணி காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது. குரோவே‌ஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கப்படாத அகமது மூசா, ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நைஜீரிய அணியில் இடம்பெற்றார். அந்த முடிவு சரிதான் என்பதை அவரும் நிரூபித்துக்காட்டினார்.

ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் விக்டர் மோசஸ் அனுப்பிய பந்தை மிக நேர்த்தியாக வலைக்குள் தள்ளினார் மூசா. உலகக் கிண்ணப் போட்டிகளில் இது அவ ருக்கு மூன்றாவது கோல். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டி களில் அதிக கோலடித்த நைஜீரிய ஆட்டக்காரர் எனும் பெருமைக்கும் அவர் சொந்தக்காரரானார். அந்த எண்ணிக்கையை 75வது நிமிடத்தில் நான்காக உயர்த்திக் கொண்டார் மூசா. அதன்பின் கோல் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைக்க ஐஸ்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அவ்வணியின் முன்னணி வீரரான கில்ஃபி சிகுர்ட்சன் பெனால்டி வாய்ப்பில் பந்தைக் கம்பத்திற்கு மேலே உதைத்து வீணாக்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!