சுவிஸ் தாக்குதலில் நிலைகுலைந்த செர்பியா

கலினின்கிராட்: இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில், முதலில் கோலை விட்டுக்கொடுத்தபோதும் பின் எழுச்சி கண்டு வெற்றியை ஈட்டிய முதலாவது அணி எனும் பெருமையைத் தேடிக்கொண்டது சுவிட்சர்லாந்து அணி. பரம வைரியான செர்பியாவிற்கு எதிரான 'இ' பிரிவு ஆட்டத்தின் ஐந்தாம் நிமிடத்திலேயே சுவிட்சர் லாந்து பின்னடைவைச் சந்தித்தது. அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலை யால் முட்டி கோலடித்து, அரங்கில் திரண்டிருந்த செர்பிய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இரண்டாம் பாதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அறியா மல், 1-0 என முன்னிலை பெற்ற உற்சாகத்துடன் செர்பிய அணி யினர் இடைவேளைக்குச் சென் றனர்.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏழாவது நிமிடத்தில் 25 மீட்டர் தொலைவில் இருந்து கிரானிட் ஸாக்கா மிக அற்புதமானதொரு கோலை அடிக்க, அதிர்ச்சியில் செர்பிய ரசிகர்கள் மூச்சுக்காட்டா மல் அமைதியில் ஆழ்ந்தனர். அதோடு நில்லாமல், கடைசி நிமிடத்தில் ஸெர்டான் ஷாக்கிரி கோலடித்து 2-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்துக்கு வெற்றி தேடித் தந்தது செர்பிய ரசிகர்களின் மனங்களைச் சுக்குநூறாக உடைப் பதாக இருந்தது.

தமது வீரர்களின் இறுதி வரை போராடும் குணமும் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுமே ஆட்டத்தின் போக்கை மாற்றிய தாகக் குறிப்பிட்டார் சுவிட்சர்லாந்து பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் பெட் கோவிச். "தொடக்கத்திலேயே பின்ன டைய நேரிட்டபோதும் எங்களது ஆட்டக்காரர்கள் வெற்றி மன நிலையுடன் விளையாடியதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்," என்றார் பெட்கோவிச். முன்னதாக, கோஸ்டா ரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன்மூலம் 'இ' பிரிவில் பிரேசில் முதலிடத்திற்கு முன்னேறியது. பிரேசிலுடன் முதல் ஆட்டத்தில் சமன் கண்ட சுவிட்சர்லாந்து, அவ்வணியைப் போன்றே நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தில் பின்தங்கி யதால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மூன்று புள்ளிகள் உடன் செர்பியா மூன்றாமிடத்தில் உள்ளது. இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டதால் கோஸ்டா ரிக்கா தொடரைவிட்டே வெளி யேறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!