சோச்சி: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியிலிருந்து ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும் என்ற பலரது ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் வீணாகின. 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர் மனி, சுவீடன் அணிகள் நேற்று முன்தினம் பின்னிரவு 2 மணிக்கு பொருதின. ஆட்டத்தின் முடிவில் கூடுத லாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர் மனி அணியின் டோனி குரூஸ் 95வது நிமிடத்தில் கோல் அடித்து தமது அணிக்கு வெற்றி யைத் தேடித் தந்தார். இதன் விளைவாக சுவீடனை 2-1 எனும் கோல் கணக்கில் நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்ம னி வென்றது. அடுத்த சுற்றுக் குள் ஜெர்மனி தகுதி பெறுவதற்கா ன நம்பிக்கைக்கு அணியின் வெற்றி உயிர் கொடுத்தது.
ஆட்டம் முடிவடையும் தருணத் தில் ஜெர்மனிக்கு கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பை நழுவவிடாமல் அற்புதமாக பந்தை வலைக்குள் புகுத்தி அணிக்கு மூன்று புள்ளி களைப் பெற்றுத் தந்தார் குரூஸ். இந்த வெற்றியின் மூலம் நான்கு முறை உலகக் கிண்ணத் தை வென்றுள்ள ஜெர்மனி, 'எஃப்' பிரிவு தரவரிசையில் மூன்று புள்ளிகளுடன் சுவீடனுடன் சம நிலையில் உள்ளது. மெக்சிகோ அணி முதல் இரு ஆட்டங்களை வென்ற நிலையில், ஆறு புள்ளி களுடன் பிரிவில் முன்னணி வகிக்கிறது.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். என்றா லும், ஆட்டத்தின் 32வது நிமிடத்தி ல் டோனி குரூஸ் மத்திய திட லில் பந்தைத் தவறுதலாகக் கைவி ட, சுவீடனின் ஓலா தொய் வோனன் வாய்ப்பைக் கைப்பற்றி கோல் அடித்து அணியை முன்னி லைப்படுத்தினார். இடைவேளை நெருங்கும் வேளையில் சுவீடன் இன்னொரு கோலைப் போடவிடாமல் ஜெர்மனி யைக் காப்பாற்றினார் கோல் காப்பா ளர் மேனுவல் நியூவர்.
ஜெர்மனிக்கும் சுவீடனுக்கும் இடையிலான முதல் சுற்று ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் 'ஃப்ரீ கிக்' மூலம் கிடைத்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி அற்புதமாக கோல் அடித்து ஜெர்மனிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார் மத்திய திடல் ஆட்டக்காரரான டோனி குரூஸ். படம்: ராய்ட்டர்ஸ்