நிஸ்னி நோவ்கொரொட்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 'ஜி' பிரிவில் நேற்று இரவு 8 மணிக்கு இங்கிலாந் துக்கும் பனாமாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து காட்டில் ஒரே கோல் மழை பெய்தது. பனாமாவை அந்த அணி 6=1 எனும் கோல் கணக்கில் புரட்டிப் போட்டது. ஏற்கெனவே பெல்ஜியத்தின் கரங்களில் 3-0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்ட பனாமாவுக்கு இந்தப் படுமோச மான தோல்வி அணியைத் தலைகுனிய வைத்துள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தி லேயே விவேகத்துடன் விளையா டிய இங்கிலாந்துக்கு கைக்கு மேல் பலன் கிட்டியது. ஆட்டத் தின் முதற்பாதியிலேயே ஐந்து கோல்களை அடித்து வெற்றியை உறுதிசெய்துவிட்டது இங்கிலா ந்து. ஆட்டத்தின் 8வது, 40வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தார் தற்காப்பு ஆட்டக்கார ரான ஜான் ஸ்டோன்ஸ்.
பனாமாவின் மைக்கல் அமிர் முரில்லோ, இங்கிலாந்து கோல் காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபர்ட்டுடன் மோதுகிறார். எனினும், அவரின் இந்த முயற்சி பலிக்கவில்லை என்பது மட்டுமின்றி, பனாமா இங்கிலாந்திடம் சுருண்டு 6-1 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ்