வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உள்துறை குழு தேசிய சேவையின் எல்லா 200,000 சாதாரண உறுப் பினர்களும் $30,000 மதிப்புள்ள தனிநபர் விபத்து காப்புறுதியை இலவசமாகப் பெறுவர். அந்த உறுப்பினர்களுக்கு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளில் இதுவும் ஒன்று. இப் படியொரு சலுகையை தேசிய சேவை சங்கம் அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. உள்துறை குழு தேசிய சேவை உறுப்பினர் களாக உள்ள சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை ஆகியவற்றில் பணி யாற்றுவோருக்கு 'ஏஎக்ஸ்ஏ' காப் புறுதி நிறுவனம் மூலம் இந்த இல வச விபத்து காப்புறுதி கிடைக்கும்.
இலவசமாக இருந்தபோதிலும் மாதத்திற்கு ஒரு வெள்ளிக்கும் குறைவாக காப்புறுதிக்காக செலுத் தினால் பயன்பெறக்கூடிய தொகை யை $100,000க்கும் $150,000க்கும் இடைப்பட்ட தொகைக்கு உயர்த் திக்கொள்ள முடியும். மனிதவள அமைச்சரும் உள்துறைகுழு தேசிய சேவை தலைவருமான ஜோசஃபின் டியோ யுனிவெர்சல் ஸ்டூடியோஸில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் புதிய சலுகைகளை அறிவித்தார்.