அஸிஸி கேளிக்கை தின விழா வின்போது சிடிஎல் எனப்படும் 'சிட்டி டெவலப்மெண்ட்ஸ்' குழும தலைமை நிர்வாக அதிகாரி ஷெர்மன் குவெக் நீர்த்தொட்டிக் குள் விழுந்து சுற்றியிருந்தவரை மகிழ்வித்தார். தாம்சன் சாலையிலுள்ள 'எஸ் ஜேஐ இண்டர்நேஷனல்' பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவ ரது இந்தச் செய்கைக்கு மட்டும் $183,846 நிதி திரட்டப்பட்டது. சிடிஎல் வர்த்தகப் பங்காளி களிடமிருந்தும் கேளிக்கை விழா வுக்கு வந்திருந்தவர்களிடமிருந் தும் இத்தொகை திரட்டப்பட்டது. அஸிஸி அந்திமகாலப் பரா மரிப்பு இல்லத்தில் வலி நிவாரணப் பராமரிப்புத் தேவைப்படும் நோயளி களுக்கும் அவர்களின் குடும்பத் தினருக்கும் இந்நிதி பலனளிக்கும். கடந்தாண்டு, திரு குவெக், மூன்று சக்கர வண்டியில் சென்று அஸிஸி இல்லத்திற்கு நிதி திரட்டினார்.
அஸிஸி கேளிக்கை விழா ஆண்டின் ஆகப்பெரிய நிதித் திரட்டு நிகழ்வு என்பது குறிப் பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் தெமாசெக் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாகி ஹோ சிங்கும் பங்கேற்றனர். பிரத மரின் துணைவியாரான திருவாட்டி ஹோ சிங், அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்தின் புரவலராக உள்ளார்.
'சிடிஎல்' குழும தலைமை நிர்வாக அதிகாரி ஷெர்மன் குவெக் நீர்த்தொட்டிக்குள் விழுந்து வேடிக்கை காட்டுவதை அங்கு திரண்டிருந்த ஏராளமான பார்வையாளர்கள் ரசித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்