மலேசியாவின் அடுத்த பிரத மராக பதவி ஏற்கவிருக்கும் அன்வார் இப்ராஹிம் கடுமை யான தோள் பட்டை, முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையைக் கண்காணித்து மதிப்பிட்டு வருவதாக சனிக் கிழமை அன்வார் இப்ராஹிம் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது. திரு அன்வாருடன் குடும்பத் தினர் உடனிருக்கிறார்கள். அன்வாருக்கு உடல்நிலை சரி யில்லை என்றதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், கவலைத் தெரிவித்தவர்கள் சீக்கிரமாக அவர் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவருக் கும் அந்த அறிக்கையில் குடும் பத்தினர் நன்றி தெரிவித்துள் ளனர். இந்த விவரங்களை 'தி ஸ்டார்' செய்தித்தாள் தெரிவித் தது. பிகேஆர் கட்சியின் ஆலோச கரான அன்வார், சனிக்கிழமை இரவு மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அன்வார் இப்ராஹிம். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்