கோலாலம்பூர்: சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சிட்டி காசிமை தடுப்புக்காவலில் வைத்து விசார ணை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி காவல் துறையினர் மனுத் தாக்கல் செய் திருந்தனர். ஆனால் காஜாங் நீதிமன்றம் அந்த மனுவை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து சிட்டி காசிம் விடுவிக்கப்பட்டார். சிட்டியை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்க போலி சார் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிட்டி காசிமுக் காக வாதாடிய 12 வழக்கறிஞர் களில் ஒருவரான அம்பிகா சீனி வாசன், "சிட்டியைத் தடுப்புக் காவலில் வைக்க அடிப்படைக் காரணம்கூட இல்லை," என்றார். பெட்டாலிங் ஜெயா நாடாளு மன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, "சிட்டியைக் கைது செய்தது நியாயமற்ற செயல்," என்றார்.<ப்> தற்போதைய 'புதிய மலே சியா'வில் இதுபோன்ற சம்ப வங்கள் நடைபெறக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
சமூக ஆர்வலர் சிட்டிக்காக நீதிமன்றத்தில் வாதாடிய 12 வழக்கறிஞர்களில் ஒருவரான அம்பிகா சீனிவாசன், சிட்டியைக் கைது செய்ய காரணம் இல்லை என்றார். படங்கள்: த ஸ்டார் ஆன்லைன்