பெர்லின்: ஜெர்மனியில் குடி யிருப்புக் கட்டடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் குறைந்தது 25 பேர் காயம் அடைந்தனர். இதில் நால்வரின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. கட்டடத்தில் வெடிப்பு நிகழ்ந்த போது பல குடியிருப்பாளர்கள் தப்பிவிட்டனர். ஆனால் இன்னமும் பலர் கட்டடத்திற்குள் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்கும் பணிகளை தீ அணைப்பு துறையினர் மேற் கொண்டுள்ளனர். இதற்கிடையே பொதுமக்களும் சிமெண்ட் கான்கிரீட் பாளங்களை அகற்றி இடிபாடுகளில் சிக்கியுள்ள வர்களை மீட்டு வருகின்றனர். உப்பர்டால் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் நேற்று காலை வெடிப்பு ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் ஒரு பகுதி தரைமட்டமானது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில் இடிபாடு களுக்கு அடியில் மேலும் குடி யிருப்பாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் வேளையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களில் நான்கு பேர் உயிருக்குப் போராடி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
குடியிருப்புக் கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு பகுதி தரைமட்டமானது. படம்: ஏஎஃப்பி