யீஷூனில் அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று தீ மூண்டதை யடுத்து கரும்புகை கிளம்பியது. அதை சுவாசித்ததால் பாதிக்கப் பட்ட இரண்டு பேர் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டார்கள்.
யீஷூன் அவென்யூ 4ல் இருக் கும் 663வது புளோக்கின் 4வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் காலை சுமார் 7 மணிக்குத் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் படையினர் உடனடி யாக அந்த இடத்துக்கு விரைந்த னர். தீ மூண்ட, 12 மாடி புளோக் கின் மேல்மாடிகளில் வசிக்கும் சுமார் 100 பேர் பாதுகாப்பு காரண மாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதனிடையே, தாலியா சென் சாசி என்பவர் ஃபேஸ்புக் பக்கத் தில் அந்தத் தீ விபத்தைக் காட் டும் 16 நிமிட காணொளி ஒன் றைப் பதிவேற்றினார். தீ மூண்ட வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறி எங்கும் பரவியதை அந்தப் படம் காட்டி யது. வீட்டிற்கு உள்ளே தீ எரிந் ததும் தெரிந்தது. தீயணைப் பாளர்கள் தீயை அணைத்தனர்.
இரண்டு தீயணைப்பு வாக னங்கள், ஒரு ரெட் ரைனோ வாகனம், இரண்டு தீயணைப்பு மோட்டார்சைக்கிள்கள், ஒரு மருத்துவ வாகனம், மூன்று ஆதரவு வாகனங்கள் ஆகியவை அந்த இடத்தில் குவிந்திருந்தன. தீ மூண்ட வீட்டின் வரவேற் பறை, சமையலறை, இரண்டு படுக்கை அறைகளில் இருந்த பொருட்களில் தீப்பிடித்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் வசிக்கும் இரு ஆடவர் கள், குடிமைத் தற்காப்புப் படை அங்கு சென்றதற்கு முன்பாகவே அப்புறப்படுத்தப்பட்டு கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நான்காவது மாடியில் உள்ள வீட்டின் வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கை அறைகளில் இருந்த பொருட்களில் தீப்பிடித்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித் தது. படம்: தாலியா சென்சாசி/ ஃபேஸ்புக்