இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் தெலுங்கானாவிலும் நேற்று நிகழ்ந்த சாலை விபத்து களில் 24 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பெண்கள் உயிரிழந்தனர். வேமுலகொண்டாவில் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர் களை ஏற்றிச்சென்று கொண்டி ருந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த கால் வாயில் கவிழ்ந்து விழுந்துவிட்டது. இந்த விபத்தில் சிக்கி காய மடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.
அந்த டிராக்டரில் மொத்தம் 25 பேருக்கும் அதிகமானோர் சென்ற தாக தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொழிலாளர்கள், பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பருத்தி எடுக்க வாகனத்தில் போனதாக வும் நடுவில் விபத்துக்குள்ளாகி மாண்டுவிட்டதாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்ததையடுத்து போலிசாரும் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில் லக்ஷ்மபுரம் என்ற கிராமத்தில் மூஸி என்ற கால்வாயில் டிராக்டர் விழுந்துவிட்டதால் அதில் பயணம் செய்த 15 பெண்கள் மரணமடைந்துவிட்டனர். படம்: இந்திய ஊடகம்