ஓபைக்' சிங்கப்பூரில் தனது செயல்பாட்டை உடனே நிறுத்தும் என்று அறிவித்திருக்கிறது. வரைமுறையின்றி மிதிவண்டி கள் நிறுத்தப்படுவதற்கு எதிராக நிலப்போக்குவரத்து ஆணையத் தின் புதிய கோட்பாடுகளுக்கும் வழிமுறைக்கும் உடன்படுவதில் சிரமங்கள் இருப்பதாக அந்நிறுவ னம் நேற்று தனது செயலியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டது.
நிறுத்தமில்லாத சைக்கிள் பகிர்வு சேவையை வழங்க கடப் பாடு கொண்டுள்ளதாக அந்நிறுவ னம் தெரிவித்தது. "இருந்தபோதும், ஆணையத் தின் புதிய விதிமுறைகள் எங்கள் நோக்கத்தை ஆதரிக்கும் விதத் தில் இல்லை," என்று ஓபைக் நிறு வனம் கூறியது. மார்ச் மாதத்தில் உறுதி செய் யப்பட்ட சட்டங்களின்படி, மிதி வண்டிப் பகிர்வுச் சேவையை வழங் கும் நிறுவனங்கள், அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் நிலப் போக்கு வரத்து ஆணையத்தின் உரிமத் தைப் பெறவேண்டும். சைக்கிளின் எண்ணிக்கையை அந்த உரிமம் கட்டுப்படுத்தும். சைக்கிள் பகிர்வு சேவையை ஈராண்டு வரை செயல்பட அந்த உரிமம் வழிசெய்யும்.