எம்ஆர்டி சுரங்கம் தோண்டும் பணிக்கு முன்னதாக பூமியை நிலையானதாக்க, நிலப் போக்கு வரத்து ஆணையம் முதல் முறை யாக பனிக்கட்டிச் சுவர்களைப் பயன்படுத்தப்படுகிறது. தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மரினா பே நிலையக் கட்டுமானப் பணியில் இந்தப் பனிக்கட்டிச் சுவர்கள் நிலத்துக் குக் கீழ் 40 மீட்டர் ஆழத்தில் பயன்படுத்தப்படுகிறது. மரினா பே நிலையம் வரும் 2021ஆம் ஆண்டில் திறக்கப்படும். பூமிக்கு அடியில் வண்டல் மண் உள்ளதால் ஊழியர்கள் சுரங் கப் பணிகளை மேற்கொள்ளும் போது அதில் நீர் ஊடுருவ முடியும் என்பதால், சுரங்கத்தில் நீர்க் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
மரினா பே நிலைய கட்டுமானத் தளத்துக்கு நேற்று வருகை புரிந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுக்கு, நிலப் போக்கு வரத்து ஆணைய அதிகாரிகள் பனிக்கட்டி சுவர் உருவாக்கப்படும் முறை பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனர். பனிக்கட்டி சுவர் அமைக்கும் முறை இவ்வாண்டு மார்ச் மாதத்தி லிருந்து நடப்பில் உள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 40 மீட்டர் தொலைவுக்கு இரு புறங்களிலும் இரண்டு பணிக்கட்டிச் சுவர்கள் அமைந்தன. 1.8 மீட்டர் தடிமம் கொண்ட அந்தச் சுவர் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை நோக்கிச் செல்லும் சுரங்கப் பணிகள் எளி தாகவும் பாதுகாப்பாகவும் மேற் கொள்ளப்படுவதற்கு வழி வகுக் கும்.