பிப்ரவரி 24- மே 25 இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்தில் தேர்தல்

பேங்காக்: தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதிக்கும் மே 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்று தாய்லாந்து துணைப் பிரதமர் விசானு காம் கூறினார். இதற்கு முன்பு பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பு தேர்தல் மேலும் தள்ளி வைக்கப்படுவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. 2014ஆம் ஆண்டு புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சில அரசியல் நடவடிக்கைகளை ராணுவம் அகற்றவிருப்பதாகவும் துணைப் பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!