‘தற்காப்பில் சோடைபோனது வெற்றியைப் பறித்துவிட்டது’

எக்கதெரின்பர்க்: ஜப்பானுடனான ஆட்டத்தில் இரு முறை முன்னிலை பெற்றபோதும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததற்குத் தற்காப்பு ஆட்டக்காரர்கள் இருவரே காரணம் எனச் சாடியுள்ளார் செனகல் பயிற்றுவிப்பாளர் அலியோ சிஸே. லிவர்பூல் குழுவிற்காக விளை யாடி வரும் சாடியோ மானே ஆட் டத்தின் 11ஆம் நிமிடத்தில் அடித்த கோல் மூலம் செனகல் முன்னிலை பெற்றது. வலையை நோக்கி வந்த பந்தை ஜப்பானிய கோல்காப்பாளர் தடுத்தபோதும் அது மானே காலில் பட்டு கோலானது.

ஆனாலும் 34வது நிமிடத்தில் டக்கா‌ஷி இனுய் அடித்த அற்புத மான கோலால் ஆட்டம் 1-1 எனச் சமனுக்கு வந்தது. கடந்த மூன்று ஆட்டங்களில் அவர் அடித்த மூன்றாவது கோல் இது. பிற்பாதியின் 71வது நிமிடத்தில் மூசா வேக் புகுத்திய கோலால் செனகல் மீண்டும் முன்னிலைக்குச் சென்றது. இந்நிலையில், செனக லுக்கு எமனாகத் திடலுக்குள் நுழைந்தார் ஜப்பானின் கெய்சுகே ஹோண்டா. நட்சத்திர ஆட்டக்காரர் ‌ஷிஞ்சி ககாவாவிற்குப் பதில் ஹோண்டா மாற்று வீரராக அனுப்பப்பட்டார். நான்காவது முறையாக உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடும் ஹோண்டா, இதுவே தமது கடைசி உலகக் கிண்ணத் தொடர் என்றும் அதனால் வருத்தம் ஏதுமின்றி விடைபெற விரும்புகிறேன் என்றும் முன்னதாகக் கூறியிருந்தார். அதற்கேற்ற வகையில் அவரது செயல்பாடும் இருந்தது. ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்தபோது வலைக்கு அருகே இருந்து அவர் கோலடிக்க, ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை கண்டது.

மாற்று வீரராக வந்தும் கோலடித்து ஆட்டத்தைச் சமன்படுத்திய ஜப்பானின் அனுபவ வீரர் கெய்சுகே ஹோண்டா. படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!