'ப்ரியமுடன்' படத்தில் வித்தியா சமான கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்தவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா. அதன் பிறகு 'யூத்' உட்பட ஏரா ளமான படங்களை இயக்கியவர். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'பத்து செகண்ட் முத்தம்' என்று வித்தி யாசமான தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் சரிஷ் நாயகனாக வும் கீதா நாயகியாகவும் நடித் துள்ளனர். 'மிஸ்டர் இந்தியா' பட் டம் பெற்ற சீனிவாசனை வில்ல னாக்கி உள்ளனர்.
படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதா பாத்திரத்தில் நடிக்க புதுமுகம் தேவைப்பட்டதாம். இதற்கான தேர்வில் பலர் பங்கேற்றும் யாரும் இயக்குநருக்குத் திருப்தியை ஏற்படுத்தவில்லை. "நீங்களே நடியுங்களேன்," என உதவி இயக்குநர்கள் ஆலோ சனை கூற, அதை ஏற்று தாமே அந்த வேடத்தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார் செல்வா.