பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதுப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. சாயிஷா நாயகியாக நடிக்கிறார். இது விவசாயத்தின் மேன்மையை மேலும் உயர்த்திப்பிடிக்கும் படமாம். இந்தக் கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதே பாண்டிராஜின் திட்டமாக இருந்ததாம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போக, கார்த்தியை அணுகினாராம் பாண்டிராஜ். 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற விறுவிறுப்பான படத்தில் நடித்து முடித்திருந்த கார்த்தியும் அந்தச் சமயத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறொரு கதைக்காகக் காத்திருந்த நேரம் அது.
விவசாயப் பின்புலத்தில் பாண்டிராஜ் சொன்ன கதை கார்த்திக்கு ரொம்பவே பிடித்துப் போனது. "வெறும் அதிரடி, அடிதடிப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் பிறகு அதிலிருந்து மீள்வது சிரமமாகிவிடும். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதேபோன்ற கதைகளையே நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். எனவே அடுத்தடுத்து மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்யவேண்டும். அதனால்தான் விவசாயம் சார்ந்த கதைக்களத்தை தேர்வு செய்தேன்," என நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் கார்த்தி.