கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத் திருக் கோயில் பணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு திருக் கோயில்கள் முதுநிலைப் பணியா ளர்கள் சங்கப் பொதுச்செயலர் ஜீவானந்தம், நாளை முதல் கோவில்களில் அர்ச்சனைகளும் அன்னதானமும் நிறுத்தப்படும் என்றார். திருக்கோவில் பணியாளர்க ளுக்கு பணிக்கொடை வழங்கப் பட வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கை களை அப்பணியாளர்கள் வலியு றுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சில போராட் டங்களும் நடத்தப்பட்டன. இதை யடுத்து 27ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக ஜீவானந்தம் கூறினார். "அறநிலையத்துறைக்கு உட் பட்ட திருக்கோயில்களில் வழக் கமாக நடைபெறும் பூசைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படமாட்டாது. திருவிழாக் கள், தேரோட்ட நிகழ்வுகளும் வழக்கம்போல் நடைபெறும். "ஆனால் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குதல், அர்ச்சனை செய்தல், நேர்த்திக்கடன் செலுத் துதல் உள்ளிட்டவை நடைபெறாது. கோவில்களில் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது" என்றார் ஜீவானந்தம்.