மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக் கையில் போதைப் பொருள் குற்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் $78,000 மதிப்புள்ள போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. நேற்று முன் தினம் மூன்று திடீர் சோதனை நட வடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரி கள் 991 கிராம் ஹெராயின், 90 கிராம் ஐஸ், ஒரு பாட்டில் மெத்தடன் ஆகியவற்றைக் கைப் பற்றினர்.
கைதான நால்வரும் சிங்கப்பூரர்கள். திங்கள் இரவு நடந்த சோதனை யில் சர்க்கியூட் சாலை அருகே இரு சந்தேக போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்தனர். அவர்களது வாகனத்திலிருந்து போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இரண்டாவது சோதனையில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மறைவிடத்தில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள். சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஹெராயின். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு