மதுரை: சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் போலிசில் சிக்கி உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.9 கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக முத்துப்பாண்டி என்பவர் மீது போலிசார் குற்றம் சாட்டி இருந்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
10 ஆண்டுகளாகப் போலிசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த அவர், இரு தினங்களுக்கு முன் மதுரை வந்ததாகப் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துத் தனிப்படை போலிசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் 3 சிலைகளை முத்துப்பாண்டி உள்ளிட் டோர் சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளிடம் ரூ.15 லட்சத்துக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.