'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் கவுதம் கார்த்திக் மிகவும் சிரமப்பட்டு நடித்தார் என்கிறார் நடிகர் சதீஷ். இப்படக்குழுவினர் நேற்று முன்தினம் சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்தனர். அப் போது பேசிய சதீஷ், கவுதமை நன்றாகவே சீண்டினார். அவரது பேச்சால் அரங்கில் தொடர்ந்து சிரிப்பலை எழுந்தது. "இயக்குநர் திரு பேசும்போது கவுதம் கார்த்திக் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கி றார் என்றார். அதை நான் ஏற்கமாட்டேன்.
"காரணம், முந்தைய படங் களில் எல்லாம் கவுதம் நடிக்கவே இல்லை. மாறாக, வாழ்ந்து காட்டியிருக்கிறார்," என்றார் சதீஷ். இதையடுத்து 'இருட்டு அறை யில் முரட்டுக் குத்து', 'ஹரஹர மகாதேவகி' ஆகிய படங்களைக் குறிப்பிட்டு, அவற்றில் கவுதம், தான் ஏற்றிருந்த கதாபாத்தி ரமாகவே மாறிப்போனதாக சதீஷ் குறிப்பிட்டபோது அரங்கில் பலத்த கைத்தட்டல்.
'மிஸ்டர் சந்திரமௌலி' படக்குழுவினர்.