நடிகை காஜல் அகர்வால் அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார். இனி தான் நடிக்க இருக்கும் படங்களைத் தொடர்ந்து தயாரிப்பதே அவரது திட்டம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அண்மைக்காலமாக கதாநாயகி களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிப்பதையே முன்னணி நாயகிகள் விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய படங்களைத் தயாரிக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நடிகைகளே அத்தகைய கதைகளைத் தயாரிக்க முன்வர வேண்டியுள்ளது. அந்த வகையில் நயன்தாரா, சமந்தா வரிசையில் காஜலும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளாராம்.
"இனி வெறுமனே மரத்தைச் சுற்றிவந்து டூயட் பாடும் நாயகியாக என்னைத் திரையில் காணமுடியாது. நல்ல, கனமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவேன்," என்கிறார் காஜல்.