வோல்கோகிராட்: ஓர் ஆட்டத் தில்கூட வெல்ல முடியாமல், முதல் சுற்றிலேயே உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறியதற்காக எகிப்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் அவ்வணியின் நட்சத்திர வீரரான முகம்மது சாலா (படம்). 'ஏ' பிரிவில் இடம்பெற்ற எகிப்து, சவூதி அரேபியாவிற்கு எதிரான தனது கடைசி ஆட் டத்தில் சாலா அடித்த கோலால் முன்னிலை பெற்றது.
ஆனாலும், அதைத் தக்கவைக்கத் தவறிய அந்த அணி, அடுத்து இரண்டு கோல்களை விட்டுக் கொடுத்து 1-2 என்ற கணக் கில் தோல்வி கண்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கியபோதும் எகிப்து இன்னும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால் எகிப்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பர் எனக் குறிப்பிட்ட சாலா, அவர் களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் சொன்னார்.