கலினின்கிராட்: மொரோக்கோ விற்கு எதிரான ஆட்டத்தில் இரு முறை பின்னடைவைச் சந்தித்த போதும் ஒருவழியாக மீண்டு, 2=2 எனும் கோல் கணக்கில் ஆட்டத் தைச் சமன் செய்தது முன்னாள் வெற்றியாளரான ஸ்பெயின். ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டியும் 1-2 எனப் பின்னிலை யில் இருந்த ஸ்பெயினுக்கு இடை நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத் தில் கைகொடுத்தார் இயாகோ ஆஸ்பஸ்.
கூடுதல் நேரத்தில் அவர் அடித்த கோலை ஏற்க முதலில் நடுவர் மறுத்தார். அவர் 'ஆஃப் சைட்' நிலையில் இருந்ததாகக் கூறிய நடுவர், பின்னர் காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம் மூலம் மறுஆய்வு செய்தார். அதில் ஆஸ்பஸுக்குச் சற்று முந்திய நிலையில் மொரோக்கோ ஆட்டக் காரர் ஒருவர் இருந்தது தெளி வாகத் தெரிந்ததால் பின்னர் அது கோலாக அறிவிக்கப்பட்டது.
கடைசித் தருணத்தில் கோலடித்ததன் மூலம் மொரோக்கோவிற்கு எதிரான ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்த ஸ்பெயினின் இயாகோ ஆஸ்பஸ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்