சிங்கப்பூரின் மத்திய, மேற்குப் பகுதிகளில் கனமழை, வெள்ளம்

சிங்கப்பூரின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததன் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தோ தக் அவென்யூவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக நேற்றுக் காலை 9 மணிக்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் டுவிட் டரில் தெரிவித்தது. வாகனங்கள் கடந்து செல்லக் கூடிய அளவுக்கு இருந்த வெள்ள நீர், முற்பகல் சுமார் 10.50 மணிக்கு வடிந்துவிட்டது. தீவு விரைவுச் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுவிட்டதாக சுமார் 1 மணி நேரம் கழித்து அந்தக் கழகம் அறிவித்தது. அந்த விரைவுச் சாலையின் முதல் தடத்தைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோ சனை கூறப்பட்டது.

விரைவுச்சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் முற்பகல் சுமார் 10.45 மணிக்கு வடிந்துவிட்டது. இருந்தாலும் முற்பகல் சுமார் 11.40க்கு மறுபடியும் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. இது பிற்பகல் 12.20க்கு வடிந்தது. தோ தக் அவென்யூவில் தீவு விரைவுச்சாலை அருகே வெள்ளத் தில் வாகனங்கள் சென்றதை நேற்று இணையத்தில் பதிவேற்றப் பட்ட ஒரு காணொளி காட்டியது. ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் ரீஜண்ட் சிங்கப்பூர், தங்ளின் மால் அருகே அதிக வெள்ளம் ஏற்படக் கூடும் என்று முற்பகல் 10 மணிக்குத் தெரியவந்தது. அங்கு தண்ணீர் மட்டம் சுமார் 90% உயர்ந்தது. இருந்தாலும் நீர் மட்டம் வடிந்துவிட்டதாக அந்தக் கழகம் முற்பகல் 10.16 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்தது.

புக்கிட் தீமா ரோட்டில் இருக் கும் சைம் டார்பி சென்டர் அருகே வெள்ளம் ஏற்படும் நிலை இருந் தது. ஆனாலும் 10 நிமிடத்தில் வெள்ளம் வடிந்துவிட்டது. சிங்கப்பூரின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் நேற்றுக் காலை கடும் மழை எதிர்பார்க்கப் பட்டது. நேற்று முற்பகல் 11.50 மணிக்கு கிளமெண்டி பகுதியில் ஆக அதிக மழை பதிவாகியது. 30 நிமிடங்களில் 25.6 மி.மீ. மழை அங்கு பெய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!