மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்புக்குச் சொந்தமான ஆறு வீடுகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களை திரு அமர் சிங் பட்டியலிட்டார். அதன் விவரம் வருமாறு:
ரொக்கம்
116.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம். 26 நாடுகளின் நாணயங்கள் கலந்த ரொக்கத்தை கணக்கிட 22 மத்திய வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். பணம் எண்ணும் ஆறு இயந்திரங்களின் உதவியுடன் ரொக்கப் பணம் முழுவதையும் எண்ணி முடிக்க மூன்று நாட்கள் ஆயின.
நகைகள்
கைப்பற்றப்பட்ட மொத்த நகைகளின் எண்ணிக்கை 12,000. அவை 25 மூட்டைகளில் இருந்தன. 1,400 கழுத்துப் பட்டை கள் (நெக்லஸ்), 2,200 மோதிரங்கள், 2,100 வளையல்கள், 2,800 ஜோடி தோடுகள், 1,600 உடையலங்கார ஊசிகள், 14 தங்கக் கிரீடங்கள்.
கைப்பைகள்
37 வெவ்வேறு வணிக முத்திரை (பிராண்ட்) கொண்ட 567 ஆடம்பர கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுள் உலகப் புகழ்பெற்ற ஹெர்மிஸ், ப்ராடா, சேனல், ஜுடித் லீபெர், ஆகிய பைகள் அடங்கும். ஒரு ஹெர்மிஸ் கைப்பை மட்டும் 51.3 மில்லியன் ரிங்கிட்.