மனைவியின் முன்னாள் காதலரை கொடூரமாகக் கொலை செய்த 58 வயது வர்த்தகருக்கு முன்னர் கொடுக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை மரண தண்டனை யாக மேல்முறையீட்டு நீதி மன்றம் உயர்த்தியுள்ளது. அவரது தண்டனையை உயர்த்தக் கோரி அரசு தரப்பு மனுச் செய்திருந்தது. மூன்று நீதிபதிகளின் அமர்வு கொண்ட மேல்முறையீட்டு நீதி மன்றம், சியா கீ சென் கொடூரமான குற்றம் புரிந்ததுடன் இறந்தவரின் உயிரைத் துச்சமாக மதித்து செயல்பட்டவர்.
மிகவும் கடுமை யான காயங்களை விளைவித் த து டன் மனித இனத்துக்கே எதிராக செயல்பட்டதால் அவருக்கு மரண தண்டனைதான் சரியான தண்டனை என்று கூறியது. மரண தண்டனைதான் இறுதி யான தண்டனை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அதை இந்த வழக்கில் தீவிர பரிசீலனைக்குப் பின்னரே வழங்கியுள்ளதாகக் கூறியது.
37 வயது திரு டெக்ஸ்மன் சுவா யீஷியை சுவா சூ காங் அடுக்குமாடி கட்டடம் அருகே சியை கடத்தினார். அவரை வேன் ஒன்றின் பின்புறத்தில் வலுக்கட் டாய மாக ஏற்றி, கடந்த 2013 டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளார். சியாவுடன் இந்தக் காரியத்தில் ஈடுபட்ட இந்தோனீசியரான ஃபெப்ரி இர்வான்சியா டிஜாட்மிக்கோ, 35, சிங்கப்பூரி லிருந்து தப்பிவிட்டார். 67 வயது வேன் ஓட்டுநர் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடல் பின்னர் லிம் சூ காங்கி லுள்ள ராணுவ துப்பாக்கிப் பயிற்சி இடத்தில் வீசப்பட்டது.